சிவகங்கையில் பாலியல் வழக்கில் தொடர்புடைய இளைஞர் நீதிமன்றத்துக்குள் நுழைந்து கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிவகங்கையில் கடந்த 2015ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் காவல்துறை அதிகாரி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிவகங்கை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. புதிய திருப்பமாக புகார் தந்த செல்வியே குற்றவாளி என தெரிய வந்ததையடுத்து, செல்வி அவரது மகன் அசோக் உள்பட 12 பேர் மீது வழக்கு பதிவுசெய்து சிபிசிஐடி போலீசார் வழக்கை நடத்தி வருகின்றனர்.
வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நடந்துவரும் நிலையில், விசாரணை அடுத்த மாதம் 20ந் தேதிக்கு ஒத்தி வைக்கபட்டது. வழக்கு விசாரணை காலதாமதம் ஆவதாக கூறி,குற்றம் சாட்டபட்ட செல்வியின் மகன் அசோக் நீதிமன்றத்துக்குள் புகுந்து திடீரென பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டார். ரத்த வெள்ளத்தில் இருந்த அசோக்கை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்