[X] Close >

ஐபிஎல் தொடரில் விளையாட மும்பைக்கு புறப்பட்டது சென்னை அணி!

Mahendra-Singh-Dhoni-and-CSK-Team-Flies-to-Mumbai-to-play-in-the-IPL-2021-Season

வரும் ஏப்ரல் 9 ஆம் தேதியன்று ஆரம்பமாக உள்ள ஐபிஎல் 2021 சீசனில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் ஐந்து லீக் போட்டிகளை மும்பையில் விளையாட உள்ளது. அதற்கு உகந்த வகையில் சென்னை அணி மும்பைக்கு பறந்து சென்றுள்ளது.


Advertisement

இனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையில் பயிற்சியை மேற்கொள்ளும் என அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த மார்ச் 8 முதல் ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி பயிற்சி மேற்கொண்டிருந்தது. தோனி உட்பட பல வீரர்கள் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றனர். 

“தொடருக்கு முந்தைய இந்த பயிற்சி முகாம் வீரர்களை சிறப்பான முறையில் தயார்படுத்திக் கொள்ள உதவியுள்ளதாக நம்புகிறோம். சில நாட்கள் வலைப்பயிற்சியும் இதில் அடங்கியுள்ளது. கடந்த சீசன் முடிந்த போது மார்ச் மாதத்தில் நான் பயிற்சி முகாமில் பங்கேற்பேன் என தோனி வார்த்தை கொடுத்திருந்தார். அதனை நிஜமாக்கும் வகையில் சொன்னதை போலவே சென்னைக்கு வந்து பயிற்சி மேற்கொண்டார். இந்த சீசனில் சென்னை அணி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தும் என நம்புகிறோம். அதற்கு ஏற்ற வகையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளோம்” என விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

சென்னை அணியின் நட்சத்திர வீரர் ரெய்னா மும்பையில் முகாமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close