டெல்லி மாநில முதல்வருக்கு இருக்கும் அதிகாரத்தைவிட அம்மாநில துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரங்களை அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்களவையில் கடந்த திங்கட்கிழைமை நிறைவேற்றப்பட்ட இந்த மசோத மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது. இது தொடர்பான கூச்சல் குழப்பத்தால் அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. எனினும் கடும் அமளிக்கு நடுவே மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா, திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என வலியுறுத்தின.
பிஜு ஜனதாதளம், சமாஜ்வாதி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த மசோதாவின் மூலம், டெல்லி அரசின் தீர்மானங்கள் எதுவும் துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் இன்றி சட்டமாகாது. அதேபோல துணை நிலை ஆளுநரின் முடிவுகளை சட்டசபை அல்லது சட்டசபை குழுக்கள் மூலம் விசாரிக்க முடியாது எனவும் சொல்லப்பட்டுள்ளது. மசோதாவின்படி, டெல்லியின் தினசரி நிர்வாகத்துக்காக டெல்லி சட்டசபை எந்த புதிய விதியையும் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் இன்றி உருவாக்க முடியாது.
மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து கருத்து தெரிவித்தெ டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவல் இது இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு சோகமான தினம் எனக் குறிப்பிட்டார். இந்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுக ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி