[X] Close >

இந்த ஆண்டில் இந்திய - பாகிஸ்தான் அணிகள் 3 டி20 போட்டிகளில் மோதும் - பாக். செய்தித்தாள்

India-Versus-Pakistan-Cricket-team-Bilateral-series-going-to-be-conducted-very-soon-says-Pakistan-Newspaper-Jang

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு நடைபெறும் என பாகிஸ்தான் நாட்டின் செய்தித்தாள் ஒன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரு அணிகளும் இந்த ஆண்டுக்குள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதி விளையாடும் என சொல்லப்பட்டுள்ளது. 


Advertisement

இரு அணிகளுக்கும் இடையிலான பிரத்யேக தொடர் கடைசியாக கடந்த 2012 - 13 வாக்கில் நடைபெற்றது. அதன்பிறகு எழுந்த அரசியல் நெருக்கடியால் இரு அணிகளும் ஐசிசி மற்றும் ஆசிய கோப்பைக்கான தொடரில் மட்டுமே விளையாடி வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் ஜங் என்ற செய்தித்தாளில் விரைவில் இரு அணிகளுக்கும் இடையிலான தொடர் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டால் இது சாத்தியமாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாகிஸ்தான் அணி இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் பங்கு பெற உள்ளது. அதன் பிறகே இந்த தொடர் நடக்க சாத்தியம் இருப்பதாகவும் தெரிகிறது. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close