இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் புதியப்படத்தில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ‘நெல்சன் திலீப்குமார்’ இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். இதற்கான முதற்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பிற்காக படக்குழு ரஷ்யா சென்றதாக தகவல் வெளியானது.
நாயகிக்கான தேர்வில் மாளவிகா மோகனன், ராஷ்மிகாமந்தனா, பூஜா ஹெக்டே ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது.
அது குறித்து பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்த பூஜா பேச்சுவார்த்தை நடந்ததாகவும், ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் படக்குழு சார்பில் சொல்லப்படவில்லை என்று கூறினார்.
இந்த நிலையில், தற்போது விஜய் 65 படத்தில் கதாநாயகி ஆக பூஜா ஹெக்டே இணைவதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்திற்கு அன்பறிவு சண்டை இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர்.
பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக தெலுங்கில் நடித்து வருகிறார். ரங்கஸ்தலம், அல வைகுந்தபுரம்மலு உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். தற்போது பிரபாஸ் உடன் ராதே ஷ்யாம் படத்தி நடித்து வருகிறார்.
Loading More post
கெஜ்ரிவால் 'நேரலை' சர்ச்சை: பிரதமர் கண்டிப்பு; வருத்தம் தெரிவித்த டெல்லி முதல்வர் அலுவலகம்
தமிழகத்தில் 13,000-ஐ தாண்டியது ஒருநாள் கோரோனா பாதிப்பு - 78 பேர் உயிரிழப்பு
'ஒரே நாடு' என்ற உணர்வுடன் பணியாற்றுவோம்: மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
பிற மாநிலங்களுக்கும் உதவும் ஒரே ஆக்சிஜன் உபரி மாநிலம்! - 'கேரள மாடல்' சாத்தியமானது எப்படி?
எந்த மருத்துவமனையில் எவ்வளவு படுக்கை வசதிகள்?- முழு விவரத்தை சொல்லும் தமிழக அரசின் வலைதளம்
ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறும் டெல்லி: அதிர்வூட்டும் பின்புலமும் கள நிலவரமும்!
ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால்..? - உச்ச நீதிமன்ற யோசனையும், தமிழக அரசின் வாதங்களும்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை