உத்தரப்பிரதேச மாநிலம் ஏட்டா மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த இரண்டு காவலர்கள் சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்க மறுத்ததோடு உணவகத்தின் உரிமையாளர்கள் இருவர் உட்பட பத்து பேர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். அந்த குற்றத்திற்காக போலீசார் இருவரும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 4-ஆம் தேதியன்று அந்த மாவட்டத்தில் இருந்த உணவகம் ஒன்றுக்கு போலீசார் இருவரும் மது அருந்திய நிலையில் வந்து உணவு சாப்பிட்டு உள்ளனர். பின்னர் அவர்கள் சாப்பிட்டதற்கான கட்டணத்தை உரிமையாளர் கேட்டுள்ளார். அப்போது கட்டண தொகையை தர மறுத்ததோடு வாக்குவாதம் செய்துள்ளனர். அதையடுத்து அங்கிருந்த வாடிக்கையாளர்கள் சிலரும் கட்டணத்தை செலுத்த சொல்லியுள்ளனர்.
அந்த நிலையில் சம்பவ இடத்திற்கு திடீரென மூன்று வாகனத்தில் வந்திறங்கிய 15-க்கும் மேற்பட்ட காவலர்கள் துப்பாக்கி முனையில் உரிமையாளர்கள் இருவர் உட்பட பத்து பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் மீது ஆயுதம் மற்றும் கள்ளச்சாராயம் வைத்திருந்ததாக பொய் வழக்கு பதிந்து சிறையில் தள்ளியுள்ளனர். இதனை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கு காவல் துறையினரால் ஜோடிக்கப்பட்டது என புலப்பட்டதை அறிந்து சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்