[X] Close >

ஏப்ரல் 1 முதல் நிசான் மற்றும் டட்சன் ரக மாடல்களின் விலையை உயர்த்துகிறது நிசான் இந்தியா!

Nissan-Indian-Announces-that-their-Makes-from-Datsun-and-Nissan-model-price-will-hike-from-April-1

நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம் வரும் ஏப்ரல் 1 முதல் நிசான் மற்றும் டட்சன் ரக மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. மாடலுக்கு தகுந்ததுபோல விலையில் மாற்றம் இருக்கும் என நிசான் அறிவித்துள்ளது. ஹேட்ச்பேக், எஸ்யூவி, செடான் மாதிரியான செக்மெண்டுகளில், நிசான் இந்தியாவில் கார்களை விற்பனை செய்து வருகிறது.


Advertisement

“ஆட்டோ தொழில்நுட்ப உதிரி பாகங்களின் விலை ஏறுமுகத்தில் இருப்பதால் இந்த விலை ஏற்றத்தை எங்களால் தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும் சிறந்த விலையில் எங்களுக்கு கட்டுப்படியாகின்ற விலையில் வாடிக்கையாளர்களை திருப்தி செய்வோம்” என நிசான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். 

image


Advertisement

மஹிந்திரா, டாடா, மாருதி சுஸுகி நிறுவனங்களை தொடர்ந்து தற்போது நிசானும் இணைந்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close