[X] Close >

சென்னை: பரிதாபம் பார்த்து வேலை கொடுத்த வீட்டு உரிமையாளருக்கு நேர்ந்த கொடூரம்

Chennai-The-atrocity-that-befell-the-house-owner-who-gave-a-job-looking-miserable

பரிதாபம் பார்த்து வேலைக்கு சேர்த்த வீட்டு உரிமையாளரை கொலை செய்துவிட்டு கர்நாடகா தப்பி சென்ற தம்பதியை 24 மணி நேரத்தில் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 30 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.


Advertisement

சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு தணிகாசலம் நகர் 5-வது பிரதான சாலையை சேர்ந்தவர் ரவி (52). இவரது மனைவி கலைவாணி (47). இந்த தம்பதியின் மகனான உமேஷ் புனேவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

image


Advertisement

சௌகார்பேட்டையில் பைனான்ஸ் தொழில் செயதுவரும் ரவி, சொந்த வீடு கட்டும் போது மேஸ்திரி தமிழ்வாணன் என்பவரோடு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராகேஷ், ரேவதி தம்பதிக்கு, தமிழ்வாணன் வேலை கேட்ட போது, கலைவாணி பரிதாபப்பட்டு விசாரணை ஏதுமின்றி ராகேஷை காவலாளியாகவும், ரேவதியை வீட்டு வேலைக்காகவும் பணி அமர்த்தியதோடு அவர்கள் தங்குவதற்கு இடமும் அளித்துள்ளார்.

இந்த நிலையில், வேலை நிமித்தமாக வெளியில் சென்றிருந்த ரவி தனது மனைவயுடன் பேச, செல்போனில் பேச தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, மனைவியின் செல்போன் மணி தொபடர்ந்து அடித்துக்கொண்டே இருந்ததால் சந்தேகடைந்த ரவி, வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது, தனது மனைவி கலைவாணியின் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், தலையில் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதைக் கண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

image


Advertisement

இது குறித்து மாதவரம் காவல் ஆய்வாளர் கோபிநாத், வழக்குப் பதிவு செய்து, கொலை செய்து விட்டு தப்பிய தம்பதியை மாதவரம் துணை கமிஷனர் கிருஷ்ணராஜ் தலைமையிலான சிறப்பு படையைச் சேர்ந்த ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, நரேந்திர குமார் சௌந்தர்ராஜன், தியாகராஜன் ஆகியோர் குற்றவாளியை பிடிக்க கர்நாடகா விரைந்தனர்.

இதையடுத்து ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா ஆகிய பகுதிகளில் வசிக்கும் ராகேஷின் உறவினர்களிடம் விசாரித்தபோது; குற்றவாளி ராகேஷின் பூர்வீகம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஆர்.புரம் எனவும், ராகேஷ் பெங்களூரில் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சிறப்பு படையினர் உடனே பெங்களூர் சென்று கே.ஆர்.புரத்திலுள்ள குற்றவாளியின் வீட்டை சுற்றி வளைத்து குற்றவாளிகளை கைது செய்தனர்.

image

பின்னர் அவர்களிடம் இருந்து 30 பவுன் நகை ரூ. 10,000 ரொக்கம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ரவி வீட்டில் வேலை பார்த்த ராகேஷின் மனைவி ரேவதி, வீட்டில் அதிக பணம் இருப்பதையும் நகை இருப்பதையும் தெரிந்து கொண்டு இவர்களிடம் இருந்து அபகரிக்க கணவனும் மனைவியும் சேர்ந்து திட்டங்கள் தீட்டியதாக தெரியவந்தது.

சம்பவ நாளன்று காலை ரேவதி வீட்டினுள் வேலை செய்ய சென்றபோது அங்கு நாற்காலியில் அமர்ந்திருந்த கலைவாணி சில வேலைகளை செய்யுமாறு ரேவதிக்கு உத்தரவிட்டார். அப்போது பின் பக்கமாக வந்த ராகேஷ் அவரை இரும்பு கம்பியால் தாக்கியதாகவும், உடனே கணவன் மனைவி இருவரும் அவரை கட்டிப்போட்டு பீரோவில் இருந்த ரூ. 10000 பணம், தங்க ,செயின், மோதிரம், கம்மல், வளையல் ஆகியவற்றை சுருட்டிக்கொண்டு ஒன்றும் தெரியாதது போல் அங்கிருந்து நைசாக ஒரு ஆட்டோவில் ஏறி கோயம்பேடு வழியாக பெங்களூர் சென்றது தெரியவந்தது.

image

வீட்டின் உரிமையாளர் ரவி, நம்பிக்கையின் பேரில் இவர்களிடம் ஆதார் கார்டு மற்றும் தகுந்த ஆதாரங்களை கேட்காததால் குற்றவாளிகள் தங்களை போலீசார் பிடிக்க முடியாது என கற்பனையில் தப்பிச் சென்றதாக கூறினர். இது குறித்து மாதவரம் போலீசார், கொலை செய்துவிட்டு பணம் நகைகளை கொள்ளையடித்த கணவன் மனைவி இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த '30 சவரன் நகையும் ஒரு செல்போனையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலை நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்த சிறப்புப் படையினரை போலீஸ் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

-எழில்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close