[X] Close >

தஞ்சாவூர்: மேலும் 5 மாணவர்களுக்கு கொரோனா உறுதி

Morethan-5-Students-infected-corana-in-tanjore

கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலும் 5 மாணவர்களுக்கும் ஒரத்தநாடு கால்நடை கல்லூரி மாணவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 


Advertisement

தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 11 பள்ளிகளை சேர்ந்த 180 மாணவர்கள் மற்றும் மூன்று கல்லூரியைச் சேர்ந்த 13  மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டிருந்த நிலையில், தற்போது கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலும் 5 மாணாக்கர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கல்லூரியில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

image


Advertisement

(கோப்பு புகைப்படம்)

முன்னதாக, தஞ்சாவூரில் பள்ளி மாணவர்கள் 180 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் 75 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கும்பகோணம் கலை அறிவியல் கல்லூரியில் ஒன்பது மாணவ-மாணவிகளுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில்,  பரிசோதனையில் இன்று மேலும் 5 மாணவ மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

image


Advertisement

ஒரத்தநாடு கால்நடை கல்லூரியில் ஒரு மாணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அருகில் உள்ள கல்லூரி மாணவர்கள் உட்பட 63 பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.  

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close