பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான ‘சிச்சோர்’ திரைப்படத்திற்கு சிறந்த இந்தி மொழி திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான எம்.எஸ்.தோனி தி அண்ட் டோல்ட் ஸ்டோரி படத்தின் மூலம் கவனம் ஈர்த்தார் சுஷாந்த் சிங் ராஜ்புத். எவ்வித பின்புலமும் இல்லாமல் சீரியல் நடிகராக அறிமுகமாகி சினிமாவிலும் சாதித்ததற்காகவே சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு. அடுத்தடுத்து அவர் நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட் படங்கள்தான்.
இந்நிலையில்தான், கடந்த ஜுன் 14-ஆம் தேதி தனது மும்பை பாந்த்ரா வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் சுஷாந்த் சிங் ராஜ்புத். அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவையே உலுக்கியது அவரது மரணம். இப்போதுவரை விசாரணை நடைபெற்று வரும் நிலையில்தான், அவர் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ‘சிச்சோர்’ படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஷ்ரத்தா கபூர் ஜோடியாக நடித்திருந்தார். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்திருக்கும் சந்தோஷத்தை கொண்டாட சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிருடன் இல்லையே என்கிற வேதனையில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
Loading More post
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
ஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்!
சென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி