உலகின் பல்வேறு நாடுகளையும் கொரோனா மீண்டும் அச்சுறுத்தி வரும் சூழலில், பிரிட்டனில் கட்டுப்பாட்டுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையை உள்ளூர் போலீசார் அமல்படுத்தி உள்ளனர். அதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மக்கள், மத்திய லண்டன் பகுதியில் எதிர்ப்பு பேரணியும் நடத்தியுள்ளனர்.
அந்தப் பேரணியில் பங்கேற்ற மக்களில் சிலர் லண்டனில் உள்ள ஹைடே பார்க் (Hyde Park) பகுதியில் இருந்த போலீசாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அந்த வன்முறை சம்பவத்தினால் அதிகாரிகள் சிலர் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளதாகவும் உள்ளூர் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.
பிரிட்டனில் கடந்த ஜனவரியில் இருந்து கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதைத் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு விதிமுறைகள் அங்கு அமலாகி இருந்தன. அதேநேரத்தில், அண்மையில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில்தான் மக்கள் லண்டன் நகர வீதிகளில் இறங்கி போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலரை போலீசார் கைதும் செய்துள்ளனர்.
லண்டனில் ஊரடங்கு நடைமுறையை எதிர்த்து மக்கள் போராடுவது ஒரு வழக்கமாகி வருவதாகவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர் சமூக ஆர்வலர்கள்.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்