டெல்லியில், தான் கர்ப்பமாகவேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டு சிறுவனை நரபலி கொடுத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமேற்கு டெல்லியில் ரோஹிணி பகுதியில் வசித்துவருபவர் நீலம் குப்தா. 25 வயதான இவருக்கு 2013ஆம் ஆண்டு திருமணமாகியிருக்கிறது. இதுவரை குழந்தை இல்லாததால் தனது குடும்பத்தினராலேயே தினமும் கேலிகிண்டலுக்கு ஆளாகி வந்திருக்கிறார். மருத்துவர்களும் நீலமுக்கு குழந்தைபிறக்க வாய்ப்பில்லை எனக் கூறியிருக்கின்றனர்.
இதனால் மனமுடைந்த நீலம் நான்கு வருடங்களுக்கு முன்பே தனது சொந்த ஊரான உத்தரபிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்திலுள்ள கிராமத்திற்கு சென்று அங்கு ஒரு மாந்திரீகவாதியை சந்தித்திருக்கிறார். கருத்தரிக்க வேண்டுமானால் தெய்வங்களை பிரியப்படுத்த ஒரு குழந்தையை நரபலி கொடுக்கவேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், இந்த பெண்ணின் பக்கத்து வீட்டிலிருந்த 3 வயது ஆண்குழந்தை காணாமல் போகவே, அந்தக் குழந்தையின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்திருக்கின்றனர். இதுகுறித்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டிருந்தபோது நீலம் வீட்டின் மேற்கூரையில் ஒரு பிளாஸ்டிக் பை மூட்டை இருப்பதை கவனித்திருக்கின்றனர். சந்தேகமடைந்த போலீஸார் மூட்டையை அவிழ்த்து பார்த்தபோது, மூட்டைக்குள் காணாமல்போன சிறுவன் கழுத்தில் காயங்களுடன் சடலமாக இருந்தது கண்டறியப்பட்டது.
அக்கம்பக்கத்தினர் மற்றும் பெற்றோரிடம் குழந்தை பற்றி விசாரித்தபோது நீலம் வீட்டிற்குத்தான் குழந்தை சென்றதாக தெரிவித்திருந்தனர். இதனால் நீலத்திடம் போலீஸார் இதுகுறித்து விசாரித்தபோது முதலில் இதை மறுத்த அவர், பின்பு தான் கொலை செய்ததை ஒத்துக்கொண்டார். இதனால் சிறுவனின் பெற்றோர் நீலத்தின்மீது புகார் அளித்ததன்பேரில், போலீசார் அவரை கைதுசெய்து கொலைவழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுபற்றி துணை போலீஸ் கமிஷ்னர் பிரனவ் தயல் கூறுகையில், ‘’நீலத்திடம் விசாரணை நடத்தியதில் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் கர்ப்பம் தரிக்காததால் கணவர் வீட்டாரால் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார். இதனால் நான்கு வருடங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்குச் சென்று அங்கு ஒரு மாந்திரீகம் செய்பவரை சந்தித்திருக்கிறார். குழந்தையை நரபலி செலுத்தினால்தான் உனக்கு குழந்தை பிறக்கும் என்று கூறியதை நம்பிய நீலம், சனிக்கிழமை பக்கத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். அங்கு குழந்தையின் கழுத்தில் குத்தி கொலை செய்ததோடு, உடலை யாருக்கும் தெரியாமல் மூட்டைக்கட்டி மேற்கூரையில் வைத்திருக்கிறார்’’ என்று கூறினார்.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி