மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் தினசரி கொரோனா புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 80.5% பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 46,951 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 30,535 பேரும், பஞ்சாபில் 2,644 பேரும், கேரளாவில் 1,875 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியாவில் தற்போது 3,34,646 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 2.87 சதவீதமாகும்.
இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியைக் கடந்துள்ளது. இன்று காலை 7 மணி வரை, நாடு முழுவதும் 7,33,597 முகாம்களில் 4,50,65,998 பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 77,86,205 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 48,81,954 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 80,95,711 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்), 26,09,742 முன்கள ஊழியர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), இதர உடல் உபாதைகள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரில் 37,21,455 பேருக்கும் (முதல் டோஸ்), 60 வயதைக் கடந்த 1,79,70,931 பயனாளிகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,11,51,468 ஆக (95.75%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 21,180 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவது 212 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Loading More post
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
ஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்!
சென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி