[X] Close >

‘ஒலிம்பிக் கனவோடு இருந்தவர்’- மின்னல் தாக்கி 22 வயது பெண் உயிரிழப்பு

A-22-year-old-female-Surfer-who-was-a-olympic-hope-for-El-Salvador-killed-by-Lightning-while-practising-near-her-home-in-Pacific-Coast

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார் என்ற பெருங்கனவோடு இருந்தவர் எல் சால்வேடார் நாட்டை சேர்ந்த 22 வயது பெண், சர்ஃபர் கேத்ரின் தியாஸ் ஹெர்னாண்டஸ். அதற்காக கடற்கரையில் தீவிர பயிற்சி மேற்கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் அவரது உயிர் பறிபோனது.


Advertisement

எப்போதும்போல தனது வீட்டிற்கு அருகே உள்ள கடற்கரையில் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை அந்த நாட்டு தேசிய விளையாட்டு துறையை சேர்ந்த அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். சனிக்கிழமை அன்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் நோக்கில் விரைவில் நடைபெற உள்ள சர்வதேச அலை சறுக்கு தொடரில் கலந்து கொள்ள அவர் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். சமையல் கலை வல்லுனரான அவர் சொந்தமாக தொழிலும் செய்து வருகிறார். அவரது திடீர் மரணம் எல் சால்வேடார் நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close