[X] Close >

சென்னையில் எடுக்கப்பட்டு வரும் ரஜினிகாந்த்-நயன்தாரா பங்கேற்கும் ’அண்ணாத்த’ பாடல் காட்சிகள்

Rajinikanth-Annaatthe-song-shoot-in-progress-currently-at-Gokulam-studios--Chennai-

ரஜினிகாந்த் - நயன்தாரா பங்கேற்கும் ’அண்ணாத்த’ படத்தின் பாடல் காட்சிகள் இன்று சென்னையில் எடுக்கப்பட்டு வருகின்றன.


Advertisement

’விஸ்வாசம்’ பட வெற்றிக்குப் பிறகு சிறுத்தை சிவா ரஜினியுடன் இணைந்து ’அண்ணாத்த’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு,ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். கடந்த வருட இறுதியில் ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் உடனடியாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

image


Advertisement

மீண்டும் இந்த மாதம் 15 ஆம் தேதியிலிருந்து சென்னையில் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நயன்தாரா - ரஜினிகாந்த்துக்கு இடம்பெறும் பாடல் காட்சிகள் சென்னை பூந்தமல்லியில் இருக்கும் கோகுலம் ஸ்டூடியோஸில் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close