JUST IN

Advertisement

குல்தீப், ஜடேஜா ஜோர்: அஸ்வின் ஏமாற்றம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இலங்கைக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் குல்தீப், ஜடேஜா ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர்.


Advertisement

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் வரும் 26-ம் தேதி காலேயில் தொடங்குகிறது.

அதற்கு முன்பாக இந்தியா- இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகள் இடையிலான இரண்டு நாள் பயிற்சி ஆட்டம் கொழும்பில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த இலங்கை லெவன் அணி, முதல் இன்னிங்சில் 55.5 ஓவர்களில் 187 ரன்களில் ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக குணதிலகா 74 ரன்கள் எடுத்தார். இதில் அனைத்து வீரர்களையும் மாற்றி மாற்றி பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதால் விராட் கோலி 8 பவுலர்களை பந்து வீச வைத்தார். இதில் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், ரவீந்தர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் முகமது ‌ஷமி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். அஸ்வினுக்கு விக்கெட் கிடைக்கவில்லை.


Advertisement

அடுத்து தனது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, ஆட்ட நேர முடிவில் 30 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. அபினவ் முகுந்த் ரன் ஏதுமின்றியும், புஜாரா 12 ரன்னிலும் வெளியேறினர். லோகேஷ் ராகுல் 58 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். கேப்டன் கோலி 34 ரன்களுடனும், ரஹானே 30 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள். 2வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement