[X] Close >

“பாஜக தொண்டர்கள் கடுமையாக உழைப்பதால் கொரோனா தொற்று அவர்களை அண்டவில்லை”-குஜராத் எம்எல்ஏ

BJP-Workers-working-hard-and-that-is-the-reason-why-they-were-not-affected-with-COVID19-Infection-says-Gujarat-State-MLA-Govind-Patel

“பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் களத்தில் கடுமையாக உழைப்பதால் அவர்களை கொரோனா தொற்று அண்டவில்லை” என குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் தெற்கு தொகுதியின் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்த் பட்டேல் தெரிவித்துள்ளார். ஓய்வே இல்லாமல் கடுமையாக உழைப்பவர்களை கொரோனா நெருங்க அஞ்சும் எனவும் தெரிவித்துள்ளார். 


Advertisement

அரசியல் கட்சியினர் எந்தவித பொது நலனும் இல்லாமல் கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டப்படி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவது தான் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் இதனை அவர் தெரிவித்துள்ளார். 

image


Advertisement

முன்னதாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின்போது குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் குஜராத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க கிரிக்கெட் போட்டிகளும், உள்ளாட்சி தேர்தலும் காரணமே இல்லை என துணை முதல்வர் நிதின் பட்டேல் தெரிவித்துள்ளார். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close