திருமணமான ஒரு மாதத்திலேயே மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன், காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கோபி. இவர் சென்னை ஆலந்தூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில், ஆலந்தூர் பகுதியை சேர்ந்த விவாகரத்தான மகேஸ்வரி என்ற பெண்ணிடம் கோபிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி மகேஸ்வரியை கோபி திருமணம் செய்துள்ளார்.
பிறகு இருவரும் மேல்நல்லாத்தூர் கிராமத்தில் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவன் கோபி மனைவி மகேஸ்வரியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இரவு முழுவதும் மனைவியின் சடலத்துடன் இருந்த அவர், அங்கிருந்து மணவாளநகர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அவரை, மணவாளநகர் போலீசார் திருவள்ளூர் தாலுகா காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் சடலமாக கிடந்த மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணமான ஒரு மாதத்திலேயே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் மேல்நல்லாத்தூர் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி