[X] Close >

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு: ஆர்ச்சர் இல்லை!

ECB-announced-England-squad-for-the-ODI-Series-against-India

இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. இந்த தொடருக்கான அணியை தற்போது வெளியிட்டுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இடம் பெறவில்லை. 


Advertisement

கேப்டன் இயான் மோர்கன், மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, சாமி பில்லிங்ஸ், ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), டாம் கரண், சாம் கரண், லிவிங்ஸ்டன், பார்க்கின்சன், அதீல் ரஷீத், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டாப்லே, மார்க் வுட் ஆகிய வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் ஜேக் பால், டேவிட் மாலன், கிறிஸ் ஜோர்டன் பயணிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புனேவில் இந்தத் தொடர் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் மற்றும் டி20 தொடரை இங்கிலாந்து அணி இழந்துள்ளது. அதற்கு ஆறுதலாக ஒருநாள் தொடரை வெல்ல ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாம்பியனான இங்கிலாந்து முயற்சி செய்யும்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close