[X] Close >

கிழிந்த ஜீன்ஸ் சர்ச்சை: உத்தராகண்ட் முதல்வருக்கு போட்டோவில் எதிர்ப்பை பதிவுசெய்த இயக்குநர்

Filmmaker-Tahira-Kashyap-Khurrana-share-a-picture-of-her-wearing-Bikini-in-instagram-and-it-was-in-response-to-Uttarakhand-Chief-Minister-Tirath-Singh-Rawat-s-comment-on-Ripped-Jeans-wear

உத்தராகண்ட் முதல்வர் திரத் சிங் ராவத் பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிவது குறித்து பேசியிருந்தது சர்ச்சையாக எழுந்தது. இந்நிலையில் குறும்பட இயக்குனரும், எழுத்தாளருமான தஹிரா காஷ்யப், பிகினி உடையில் போஸ் கொடுத்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.


Advertisement

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிவது ‘மோசமான முன்மாதிரி' என்று உத்தராகண்ட் மாநிலத்தின் முதல்வர் திரத் சிங் ராவத் கூறினார். அது இணைய வெளியில் சர்ச்சையானது. இந்த நிலையில்தான் பிகினி படத்தை பகிர்ந்துள்ளார் தஹிரா காஷ்யப்.

View this post on Instagram

A post shared by tahirakashyapkhurrana (@tahirakashyap)


Advertisement


“நான் கிழிந்த ஜீன்ஸை அணியவில்லை” என அதற்கு கேப்ஷனும் அவர் கொடுத்துள்ளார். தஹிரா, பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானாவின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close