[X] Close >

கோலி அடக்கி வாசிக்க! ரோகித் அடித்து ஆட! பவர் ப்ளேயில் கெத்து காட்டிய இந்தியா!

India-Starts-well-against-England-in-the-Fifth-T20I-and-Opening-Pair-Rohit-and-Virat-Combo-works-Right-for-India

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணிக்காக கேப்டன் விராட் கோலியும், ரோகித் ஷர்மாவும் தொடக்க வீரர்களாக களம் இறங்கி சிறப்பான தொடக்கத்தை கொடுத்துள்ளனர். இந்தியா இந்த தொடரில் தொடக்க வீரர்கள் பேட்ஸ்மேன் இணையர்களில் மேற்கொண்டுள்ள நான்காவது மாற்றம் இது. முந்தைய முயற்சிகளை காட்டிலும் இந்த ஒப்பனிங் இணையர்கள் அசத்தியுள்ளனர். 


Advertisement

பவர் பிளே ஓவர் முடிவில் இந்தியா 6 ஓவர்களுக்கு விக்கெட் ஏதும் இழக்காமல் 60 ரன்களை கடந்திருந்தது. ஓவருக்கும் பத்து ரன்கள் என்பது இந்தியாவின் ரன் ரேட். இதில் ஹைலைட் என்னவென்றால் கேப்டன் கோலி அடக்கி வாசிக்க, ‘ஹிட்மேன்’ ரோகித் அடித்து ஆடினார். 

அதிரடியாக ரன்களை குவித்த ரோகித் சர்மா 34 பந்துகளில் 64 ரன்கள் விளாசி பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் க்ளின் போல்ட் ஆனார். அதில் 5 சிக்ஸர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். ஆர்ச்சர், மார்க் வுட், ஜோர்டான், அடில் ரஷீத் என இங்கிலாந்து பந்து வீச்சை ‘சும்மா.. கிழி.. கிழி’ என கிழித்தார். இந்திய அணி 11 ஓவர் முடியில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்தது. சூர்ய குமார் யாதவ் வந்த முதல் இரண்டு பந்திலும் சிக்ஸர் விளாசினார். கடந்த போட்டியிலும் முதல் பந்தில் சிக்ஸர் விளாசி இருந்தார் சூர்யகுமார் யாதவ். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close