ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா எங்களுக்கான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது என்று இலங்கை வெளியுறவு செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான மனித உரிமைகள் மீறல்கள் புகார் குறித்த புதிய தீர்மானத்தின் மீது உறுப்பு நாடுகள் மார்ச் 22 ஆம் தேதி வாக்களிக்க உள்ளன. வாக்களிப்புக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் வட்டாரங்கள், இத்தீர்மானத்தில் வாக்களிப்பது குறித்து எந்தவொரு முடிவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், இந்தியா தங்களது ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்துள்ளது என்று இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் ஜெயந்த் கொலம்பேஜ் கூறியுள்ளார்.
இங்கிலாந்து, கனடாவை உள்ளடக்கிய ஒரு 'முக்கிய குழு' , ஜெர்மனி, வடக்கு மாசிடோனியா, மலாவி மற்றும் மாண்டினீக்ரோ உள்ளிட்ட நாடுகள்தான் இந்த புதிய தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கிடையில், கடந்த வாரங்களில் அனைத்து உறுப்பு நாடுகளிடமும் தனது நிலையை விளக்கி இலங்கை ஆதரவு திரட்டி வருகிறது. இந்த அவையில் 47 உறுப்பு நாடுகள் உள்ளன.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல நாடுகளின் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் சீனா தனது ஆதரவை இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Loading More post
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா!
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
பெங்களூரூ: எரியூட்ட சடலத்துடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ