ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ரத்தம்ம்போர் தேசியப் பூங்காவில் குடும்பமாக வசித்து வந்த நான்கு புலிகள் அங்கு காணவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஒரு வருட காலமாக T-64 என்ற ஆண் புலி, T-73 என்ற பெண் புலி மற்றும் அதன் 2 குட்டிகள் காணவில்லை என தெரியவந்துள்ளது. இந்த நான்கு புலிகளும் அங்கு வசித்து வந்தவை.
சுமார் 1334 சதுர கிலோ மீட்டரில் அமைந்துள்ள இந்த பூங்கா புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. வனவிலங்குகள் இந்த பூங்காவில் அதிகளவில் வேட்டையாடப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்த நிலையில் தான் இந்த நான்கு புலிகள் காணாமல் போயுள்ளன.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கருத்து எதுவும் சொல்லாமல் ‘கப் சிப்’ என மவுன சாமியார்களாக உள்ளனர். இந்த பூங்கா பரந்த பரப்பளவு கொண்டுள்ளதால் உள்ளூர் வாசிகள் காணாமல் போன புலிகளை கொல்ல வாய்ப்பில்லை என வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நான்கு புலிகளும் சுற்றுலா பயணிகளின் கால் தடமே படாத பகுதியிலிருந்து காணாமல் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்
கொரோனா 2-ம் அலை எதிரொலி: பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி!
ஐபிஎல் 2021: டாஸ் கணக்கை மாற்றி அமைத்த கேப்டன்கள்!