[X] Close >

"விவசாயி மகள்!" - சேலத்தின் இளம் பெண் வேட்பாளர்... யார் இந்த அனுசுயா?

-Farmer-s-daughter-----Salem-s-young-female-candidate-----Who-is-this-Anusuya-

சேலம் மாவட்டத்தின் இளம் பெண் வேட்பாளர் என்ற பெருமை மேட்டூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் அனுசுயாவுக்கு கிட்டி உள்ளது.


Advertisement

ஒமலூர் அருகே நச்சுவாயலூர் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த 25 வயது நிரம்பிய அனுசுயா, மக்கள் நீதி மய்யத்தில் தொடக்கம் முதலே பணியாற்றி வருகிறார். டிப்ளமோ நர்சிங் படித்து தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கத்தின் தொழில்நுட்பவியலாளராக பணியாற்றி வந்தவர். தேர்தலில் வெற்றி பெற்றால் உலக நாடுகள் வியக்கும் வண்ணம் மேட்டூரை சுற்றுலா நகரமாக உருவாக்குவேன் என அனுசுயா உறுதி அளித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதியில் மேட்டூர் சட்டமன்ற தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கிவரும் டெல்டா மாவட்டங்களுக்கு நீராதாரமாக மேட்டூர் அணை இருந்து வருவதால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் ஒரு சுற்றுலாத் தலமக இருந்து வருகிறது.


Advertisement

இந்த மேட்டூர் அணையை மையமாக கொண்டு ஏராளமான தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது. இவ்வளவு சிறப்புமிக்க மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் 2,85,767, வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் ஒவ்வொரு தேர்தலிலும் திமுக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களே சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அவ்வளவு பலம் வாய்ந்த திராவிட கட்சிகளுக்கு சவாலாக மக்கள் நீதி மையத்தின் மேட்டூர் சட்டமன்ற இளம் பெண் வேட்பாளர் அனுசுயாவை அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் களம் இறங்கியிருப்பது இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் நச்சு வாயலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனிசாமி, சாந்தி தம்பதியருக்கு 1996 ஆம் ஆண்டு மகளாக பிறந்த அனுசுயா டிப்ளமோ நர்சிங் முடித்து தனியார் மருத்துவமனையில் புள்ள அறுவை சிகிச்சை அரங்கத்தின் தொழில்நுட்பவியலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மையத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சிறப்பாக பணியாற்றி வந்துள்ளார்.


Advertisement

இவரின் செயல்பாட்டை கண்டு கட்சியின் தலைவர் கமலஹாசன் சேலம் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குழுவிலும் அங்கம் வகித்து வருகிறார். இதனால் இவரை சிறப்பான பணியை கண்டு மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மேட்டூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அனுசுயாவை அறிவித்தார்.

இதுகுறித்து அனுசுயா 'புதிய தலைமுறை'-க்கு பிரத்தியேகமாக அளிக்கப்பட்ட பேட்டியில், "நான் ஒரு விவசாயி மகள். என்னை மேட்டூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவித்த தலைவர் கமலஹாசன் அவர்களுக்கு நன்றி. தொடர்ந்து 50 ஆண்டுகால திராவிட கட்சிகள் ஆட்சி செய்து வந்த நிலையில், தற்போது மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் கண்டு அஞ்சுகின்றனர்.

image

அவரின் திட்டங்கள் செயல்பாடுகள் அனைத்தையும் உன்னிப்பாக கவனிக்கும் திராவிடக் கட்சிகள், அவர் வெளியிடும் ஒவ்வொரு வாக்குறுதிகளையும் தங்களது வாக்குறுதிகளாக கொடுத்து வருகின்றனர். இதுவே தங்களை கிடைத்த முதல் வெற்றி.

இந்த தொகுதியில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்வது, கிராம பகுதிகளை மேம்படுத்துவதே கட்டமைப்புக்களை உருவாக்குவது, மேட்டூர் சட்டமன்ற தொகுதியை உலக நாடுகள் வியக்கும் வகையில் அதன் கட்டமைப்புகளை மேம்படுத்திக் அனை நகரத்தை சுற்றுலா நகரமாக மாற்றி சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட மேலை நாடுகளுக்கு இணையாக இந்தத் தொகுதியை உருவாக்குவேன்" என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close