[X] Close >

’கர்ணன்’ படத்தின் டப்பிங்கை முடித்த நடிகை லட்சுமி பிரியா!

Actress-Lakshmi-Priya-completes-dubbing-of--Karnan-

கர்ணன் படத்தின் டப்பிங்கை முடித்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் நடிகை லட்சுமி பிரியா.


Advertisement

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை தாணு தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தனுஷுடன் நடிகை கெளரி கிஷன், ரஜிஷா விஜயன், லட்சுமி பிரியா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

image


Advertisement

இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விரைவில் டீசர் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது படக்குழு. இந்நிலையில், இப்படத்தில் நடித்துள்ள நடிகை லட்சுமி பிரியா ‘கர்ணன்’ படத்தின் டப்பிங்கை முடித்த உற்சாகத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் எவ்வளவு பரவசமாக இருக்கிறேன் தெரியுமா? இந்த சிறப்புமிக்கப் படத்திற்காக டப்பிங் முடித்துள்ளேன். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை இன்னும் 1000 தடவை கூறுவேன். இந்த அற்புதமான படைப்பில் என்னையும் ஒரு பகுதியாக இணைத்ததற்கு நன்றி மாரி செல்வராஜ்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

image

நடிகை லட்சுமி பிரியா பல்வேறு குறும்படங்களில் நடித்திருந்தாலும் விமர்சனங்களையும் வரவேற்பையும் ஒருசேரக் குவித்த ‘லட்சுமி’ குறும்படத்தின் மூலம் கவனம் ஈர்த்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான நயன்தாராவின் ‘மாயா’ படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close