ஆர்யா நடிப்பில் வெளியான டெடி திரைப்படத்தில் டெடி பொம்மையாக நடித்தவர் யார் என்பதை அந்தப்படத்தின் இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆர்யா, சாயிஷா நடிப்பில் இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கடந்த மார்ச் 12 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘டெடி’.மக்களிடையே திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும், பெரும்பான்மையான மக்களுக்கு ‘டெடி’ படம் பிடித்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் படத்தில் இடம்பெற்ற ‘டெடி’ பொம்மை. விபத்து ஒன்றின் காரணமாக மருத்துவமனைக்கு செல்லும் சாயிஷாவின் ஆற்றல் ‘டெடி’ பொம்மைக்குள் நுழைய, சாயிஷா வழியாக டெடி செய்யும் லூட்டிகள் அனைத்தும் க்யூட்.
அந்த க்யூட்டன்ஸ்தான் படத்திற்கான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் அதனை திரையில் தத்ரூபமாக கொண்டு வருவதற்கு படக்குழு கொடுத்த உழைப்பு அதிகம். அதனை சாத்தியப்படுத்தியது சென்னையிலுள்ள Nxgenmedia எனும் கிராபிக்ஸ் நிறுவனம். ஆனால் டெடியை நமது மனதிற்கு நெருக்கமாக கொண்டுவந்தது கோகுல் என்ற தியேட்டர் கலைஞர்.
Here's the man behind the scenes! Mr. Gokul, the theatre artist who wore the body suit and acted out the full body language of #Teddy. The head is a fully 3D generated model with performance capture technology by @NxgenMedia. pic.twitter.com/DNBHsUnBZr — Shakti Soundar Rajan (@ShaktiRajan) March 18, 2021
இவர்களை அங்கீகரிக்கும் வகையில் படத்தின் இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் இவர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவுகளில் “ டெடியை பின்னால் இருந்து இயக்கியது கோகுல். தியேட்டர் கலைஞரான இவர் டெடி பொம்மையின் உடையை அணிந்து கொண்டு பொம்மையின் உடல்பாவனைகளோடு நடித்தார்.
The animation company behind the VFX of #Teddy is @NxgenMedia. They are a start up company started by a bunch of passionate youngsters located right here in Saligramam, Chennai! #SupportLocalTalent pic.twitter.com/Ek3ExSQmfJ — Shakti Soundar Rajan (@ShaktiRajan) March 18, 2021
டெடியின் தலைப்பகுதி மட்டும் 3டி கிராபிக்ஸ் முறையில் நடிக்கவைக்கப்பட்டது. அதனை செய்தது Nxgen Media எனும் கிராபிக்ஸ் நிறுவனம். அதித ஆர்வம் கொண்ட இளைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
ஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்!
சென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி