[X] Close

செல்லூர் ராஜூவை ‘தெர்மாகோல் புகழ்’ என்று விமர்சித்த மு.க.ஸ்டாலின்!

Subscribe

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றன. தற்போத் தொகுதி மற்றும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்கள் சார்பாக அந்தந்த தொகுதிகளில் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


Advertisement

அந்த வரிசையில், திமுக கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் இன்று மதுரையில் பேசியபோது, மேற்கு தொகுதி வேட்பாளர் சின்னம்மா, மத்திய தொகுதியைச் சேர்ந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், வடக்குத் தொகுதியில் போட்டியிடும் கோ.கணபதி, தெற்கு தொகுதியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர் பூமிநாதன் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிவாய்ப்பை உருவாக்கி தருமாறு கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூவை விமர்சிக்கும் விதமாக ‘தெர்மாகோல் புகழ்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்திய கூட்டத்தினர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close