ஜப்பானில் அரசு ஊழியர்கள் 2 நிமிடத்திற்கு முன்னதாக அலுவலகத்தை விட்டு சென்றதால், அவர்களுக்கு அபராதத்துடன் சம்பள குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் உள்ள சிபா நகரின் புனபாஷி நகர கல்வி வாரியம் அங்கு பணிபுரிந்து வந்த ஊழியர்கள் மீது கடந்த மார்ச் 10 ஆம் தேதி, இந்த சம்பளக் குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஜப்பான் டுடே செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மற்றொரு இணையதளம் வெளியிட்ட தகவலில், “ஊழியர்கள் வெளியேறும் நேரம் மாலை 5.15 ஆக உள்ள நிலையில் அவர்கள் 5.13 மணிக்கு வெளியேறியுள்ளனர்,” என்று குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து கல்வி வாரியம் கூறும் போது, “ கடந்த 2019 மே மாதம் முதல் ஜனவரி 2021 வரையிலான கால இடைவெளியில் 7 ஊழியர்கள் 316 முறை இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். 2 நிமிடங்கள் முன்னதாக கிளம்புவதற்காக காரணம் என்ன என கல்வி வாரியம் ஊழியர்களிடம் கேட்ட போது, 5.17 வரக்கூடிய பேருந்தை தவறவிட்டால், அதன் பின்னர் 5.47 வரும் பேருந்திலே செல்ல முடியும் என்று விளக்கம் அளித்துள்ளனர்.
அலுவலக நேரத்தை விட 2 விநாடிகள் முன்னதாக சென்ற இரண்டு ஊழியர்களுக்கு எச்சரிக்கை கடிதமும், 4 நபர்களுக்கு கடுமையாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.இதற்கு உதவும் வகையில் செயல்பட்ட 59 வயது பெண் ஊழியரின் சம்பளத்தில் வரும் காலத்தில் பத்தில் ஒரு பங்கு குறைக்கப்பட்டுவதாக நகர கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்