செல்லூர் ராஜூ தொகுதியில் தெர்மகோலுடன் வந்து திமுக வேட்பாளர் சின்னம்மா வேட்புமனு தாக்கல்

செல்லூர் ராஜூ தொகுதியில் தெர்மகோலுடன் வந்து திமுக வேட்பாளர் சின்னம்மா வேட்புமனு தாக்கல்

செல்லூர் ராஜூ தொகுதியில் தெர்மகோலுடன் வந்து திமுக வேட்பாளர் சின்னம்மா வேட்புமனு தாக்கல்

தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூவை கிண்டலடிக்கும் விதமாக, அவரை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் சின்னம்மா தெர்மாகோலுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் மூன்றாவது முறையாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் சின்னம்மா என்ற வேட்பாளர் முதன்முறையாக சட்டப்பேரவைத் தேர்தல் களம் காண்கிறார்.

மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சின்னம்மா, திமுக தொண்டர்கள் புடை சூழ தெர்மகோல் சகிதமாக காட்சியளித்தார்.

அதில், "தெர்மாகோல் ரூ.10 லட்சம் ப்பே... தெர்மாகோல் ராஜூவை துரத்தியடிப்போம்", "கோமாளி - துக்ளக் ஊழல்வாதிகளை விரட்டியடிப்போம்", "ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் வீழ்த்துவோம்" என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

அமைச்சர் செல்லூர் ராஜூவை கிண்டலடிக்கும் விதமாக இடம்பெற்று இருந்த இந்த வாசகங்களால் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com