நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவலை தடுப்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தியாவின் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் இரண்டாவது அலை ஏற்படவுள்ளதாக மத்திய குழு எச்சரித்துள்ளது. தொடர்ந்து ஆறாவது நாளாக நேற்று நாடு முழுவதும் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிரா அரசுக்கு கடிதம் எழுதியுள்ள மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஸ் பூஷன் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி லாக்டவுன் போன்ற நடவடிக்கைகள் நோய் பரவலை தடுக்க உதவவில்லை எனக் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படவேண்டும் என அவர் ஆலோசனை அளித்துள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா தொற்று பரவலை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். இன்று நண்பகல் 12:30 மணியளவில் காணொலி காட்சி வழியாக இந்த ஆலோசனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பலமுறை முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி கடைசியாக கடந்த ஜனவரியில் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்குவதற்கு முன்பு ஆலோசனை நடத்தியிருந்தார்.
Loading More post
கர்நாடகா: மடத்தில் 30 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று
வேலூர் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்த விவகாரம் - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
ஏழைநாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை, பணக்கார நாடுகளிடம் அதிக தடுப்பூசி: கிரெட்டா தன்பெர்க்
“எனக்கு பிட்னஸ் இல்லையென ஒருவரும் சொல்லிவிடக்கூடாது” - தோனி
வேலூர் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழப்பு: ஆக்சிஜன் இல்லாததே காரணமென கொதிக்கும் உறவினர்கள்
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்