[X] Close >

“கலாச்சாரம் இல்லை, எதிர்காலம் இல்லை” - விருது நிகழ்ச்சியில் ஆடையை கழற்றி நிர்வாணமான நடிகை

Actress-Strips-Naked-At-French-Oscars-To-Demand-Support-For-Country-Art-Industry

பிரான்ஸில் திரையரங்குகளை மீண்டும் திறக்க கூறி, விருது விழா வழங்கும் நிகழ்ச்சியில் இரத்தத்துடன் கலந்த கழுதை ஆடையை அணிந்து வந்த நடிகையால் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement

image

பிரான்ஸ் நாட்டில் இராண்டாம் கட்ட கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அங்கு திரையரங்குகள் உட்பட வசதிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திரையரங்கு, சினிமா சார்ந்த கலைஞர்கள் முறையான கொரோனா வழிகாட்டுதலுடன் திரையரங்குகளை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.


Advertisement

image

இந்நிலையில் இந்தக் கோரிக்கையை மேலும் வலியுறுத்தும் வகையில், பாரிஸில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில், விருது குறித்து அறிவிக்க வந்த பிரெஞ்சு நடிகை கோரின் மாசிரோ இரத்ததுடன் கலந்த கழுதை ஆடையை அணிந்து வந்தார். மேடைக்கு வந்த திடிரென அவர் அந்த ஆடையை கழற்றி நிர்வாணமாக நின்றார்.

image


Advertisement

அவரது உடலின் முன் பகுதியில் “கலாச்சாரம் இல்லை, எதிர்காலம் இல்லை” என்றும் பின் பகுதியில் ”எங்கள் கலையை மீண்டும் தாருங்கள் பிரதமர் ஜீன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், அவரது செயலுக்கு சமூகவலைதளவாசிகள் வரவேற்பு அளித்துள்ளனர்.

முன்னதாக, பிரான்ஸ் நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்ட பிரெஞ்சு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் திரையரங்குகளை எதிர்காலத்தில் திறக்க வாய்ப்பில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close