[X] Close >

“தோனியுடன் பயணிப்பது ஏன்?” மனம் திறந்த சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன்

CSK-owner-N-Srinivasan-explained-why-CSK-continuously-persisted-with-Captain-MS-Dhoni-over-the-years

ஐபிஎல் தொடர் என்றாலே எல்லோருக்கும் சட்டென நினைவுக்கு வருவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி வழிநடத்துவது அதற்கு ஒரு காரணம். அதே போல தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஆதிக்கம் செலுத்தி வருவதும் இதற்கு ஒரு காரணம்.


Advertisement

இந்நிலையில் தோனியுடன் சென்னை அணி தொடர்ந்து பயணிப்பது ஏன் என்பதை விவரித்துள்ளார் உரிமையாளர் சீனிவாசன். தோனி கடந்த 2008 ஐபிஎல் தொடர் முதல் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார்.

image


Advertisement

“உங்கள் எல்லோருக்கும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது என்னவென்றால் தோனி சென்னையில் தான் இருக்கிறார். காலை நேரங்களில் உள் அரங்கத்திற்குள் வலைப்பயிற்சியும், மதிய நேரத்தில் சேப்பாக்கத்திலும் பயிற்சி செய்து வருகிறார். அவர் மிகுந்த மன உறுதி மிக்கவர். அது தான் எங்களுக்கு பிடித்ததும் கூட. கிரிக்கெட் என்றால் வெல்வது தான். அதிலும் ஐபிஎல் என்றால் சொல்லவே வேண்டாம். ஆனால் விசுவாசமும், தொடர் அர்பணிப்பும் எங்களுக்குள் இரண்டற கலந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close