இங்கிலாந்து பவுலர்களைப் பதம்பார்க்க இந்திய அணியின் அதிரடி நாயகன் தோனி புதிய உத்தியைப் பின்பற்றி பயிற்சி மேற்கொண்டார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில், ஒருநாள் தொடரினை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்ட்டிகள் கொண்ட டி20 தொடர் கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் கான்பூர் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டனர். கேப்டன் சுமையில்லாமல் போட்டிகளில் பங்கேற்கும் தோனி மீது கூடுதல் எதிர்பார்ப்பு கூடியுள்ள நிலையில், இங்கிலாந்து பவுலர்களைப் பதம்பார்க்க பும்ரா உதவியுடன் தோனி பிரத்யேக பயிற்சியில் ஈடுபட்டார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சிறந்த பினிஷராகக் கருதப்படும் தோனி, இந்திய அணியின் யார்க்கர் ஸ்பெஷலிஸ்டான பும்ராவை சில யார்க்கர்களை வீசச் செய்து பயிற்சியினை மேற்கொண்டார். கேப்டன் பதவியை ராஜினாமா செய்தபிறகு தோனியின் பேட்டிங்கில் வேகம் கூடியிருப்பதாகவே கிரிக்கெட் விமர்சகர்கள் கருதும் நிலையில், தனது ட்ரேட் மார்க் ஷாட்டான ஹெலிகாப்டர் ஷாட்களை கான்பூர் மைதானத்தில் அவர் பறக்கவிடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
Loading More post
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி