[X] Close >

"டி20களில் அஸ்வினை சேர்ப்பதற்கு வாய்ப்பில்லை"-விராட் கோலி!

No-chance-for-Ashwin-to-return-in-shorter-formats-of-cricket-says-Virat-Kohli

டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்காக அஸ்வின் விளையாடுவதற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.


Advertisement

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று இரவு அகமதாபாத்தில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடரை கைப்பற்றிய உற்சாகத்தில் களமிறங்குகிறது இந்திய அணி. இந்நிலையில் போட்டிக்கு முன்பாக இணைய வழியாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார் விராட் கோலி.

image


Advertisement

அப்போது அஸ்வின் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் "டெஸ்ட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் அஸ்வின் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டுக்கு 50 ஓவர் மற்றும் டி20 போட்டிகளுக்கு திரும்ப வாய்ப்பிருக்கிறதா என்று கேட்கிறீர்கள். தற்போது சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் உண்மையிலேயே நன்றாக விளையாடி வருகிறார்" என்றார்.

மேலும் "ஒரு இடத்துக்கு ஒரே மாதிரியாக பந்துவீசும் இருவரை சேர்க்க முடியாது. வாஷிங்டன் சுந்தர் ஒரு சீசன் முழுவதும் மோசமாக பந்து வீசினால் அஸ்வினை சேர்ப்பது குறித்து பரிசீலிக்கலாம். அதுவரை அவர் திரும்புவதற்கு வாய்ப்பில்லை. சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் போன்ற வீரர்கள் பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாக இருக்க முடியும்" என்றார் விராட் கோலி.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close