திருப்பூரில் கரும்புக் காட்டிற்குச் சென்ற மூதாட்டியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சோமனூத்து கிராமத்தைச் சேர்ந்த குமரவேல் என்பவரின் மனைவி மீனம்மாள் (80). இவர் சோமனூத்து கிராமத்தில் உள்ள கரும்புக் காட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கூலித் தொழிலாளி தங்கவேல் (50) பின்புறமாக சென்று மூதாட்டியின் வாயை துணியால் கட்டி வைத்து, பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாட்டி நடந்ததை நெருங்கிய உறவினர்களிடம் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த உறவினர்கள் தங்கவேலுக்கு தர்ம அடி கொடுத்து, பின்னர் அலங்கியம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது தான் செய்த குற்றத்தை அந்த நபர் ஒப்புக்கொண்டார். உடனே அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மூதாட்டியை கூலித்தொழிலாளி பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!