[X] Close >

கோபத்தில் ஹெல்மெட்டை வீசிய கவுர்!

Harmanpreet-flung-her-helmet-on-the-ground

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் சாதனை சதம் அடித்தார். 90 பந்துகளில் சதம் விளாசிய அவர், 115 பந்துகளில் 171 ரன்கள் எடுத்தார். இதில் 20 பவுண்டரி, 7 சிக்சர்களும் அடங்கும்.


Advertisement

கவுர், 98 ரன்னில் இருந்த போது 2வது ரன்னுக்கு எதிர்முனையில் நின்ற தீப்தி ‌ஷர்மா தயக்கம் காட்டிய பிறகே ஓடி வந்தார். இதனால் ஹர்மன்பிரீத் கவுர், பாய்ந்து விழுந்து ரன் அவுட்டில் இருந்து மயிரிழையில் தப்பினார். இதையடுத்தே அவர் சதத்தை எட்டினார். இதனால் கடுப்பான கவுர், கோபத்தில் ஹெல்மெட்டை தூக்கி எறிந்தார். இதைக் கண்ட நடுவர்களும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீராங்கனைகளும் அதிர்ச்சியடைந்தனர். சில நிமிடங்களுக்குப் பிறகு தன்னை கூலாக்கிக்கொண்டு தொடர்ந்து பேட் செய்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close