ஆடியோ கேசட் டேப்பை வடிவமைத்த டச்சு நாட்டை சேர்ந்த பொறியியலாளர் லூ ஒட்டனஸ் காலமானார். அவருக்கு வயது 94. அவரது சொந்த ஊரான Duizel பகுதியில் இயற்கையுடன் காலந்துள்ளார் லூ ஒட்டனஸ்.
90களின் இறுதிவரையில் ஆடியோ கேசட் பயன்பாடு இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் பரவலாக பயன்படுத்தபட்டு வந்தது. குறிப்பாக தமிழகத்தின் பட்டி தொட்டி தொடங்கி சென்னை சிட்டி வரையில் ஆடியோ கேசட்களின் தேவை மக்களுக்கு தேவைப்பட்டது. தொலைக்காட்சி அதிகம் இல்லாத அந்த கால கட்டத்தில் மக்களுக்கு பொழுது போக்காக இருந்தது இந்த கேசட்டுகளின் டேப் கொடுத்த பாடல்கள் தான்.
ஓட்டென்ஸ் 1960 இல் பிலிப்ஸின் தயாரிப்பு மேம்பாட்டுத் துறையின் தலைவரானார். அங்கு அவரும் அவரது குழுவும் போர்ட்டபிள் டேப் ரெக்கார்டரை வடிவமைத்தார்கள். தொடர்ந்து 1963 வாக்கில் உலகிற்கு தாங்கள் வடிவமைத்த ஆடியோ கேசட் டேப்பை காட்சிப்படுத்தினார். அதோடு அதற்கு காப்புரிமையும் பெற்றார்.
கடந்த 6 ஆம் தேதியன்று அவர் உயிரிழந்துள்ளார். இருப்பினும் அவரது இறப்புக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
Loading More post
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி