எதிர் நுண்ணுயிர் தடுப்பு பிரச்னைக்கு, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என மாநிலங்களவையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்தார்.
மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் அவர் கூறியதாவது:
* எதிர் நுண்ணுயிர் தடுப்பு பிரச்னைக்கு மத்திய அரசு போதிய முக்கியத்துவம் அளிக்கிறது. எதிர் நுண்ணுயிர் தடுப்பை கட்டுப்படுத்த மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
* எதிர் நுண்ணுயிர் தடுப்பை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயல் திட்டம், பல அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் இணைந்து 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கப்பட்டது.
* எதிர் நுண்ணுயிர் தடுப்பை கட்டுப்படுத்துவதற்கான தேசிய திட்டம், 12வது ஐந்தாண்டு திட்டத்தில் தொடங்கப்பட்டது. நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம், இத்திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்துகிறது.
* இத்திட்டத்தின் கீழ், மாநில மருத்துவ கல்லூரிகளில் தேசிய எதிர் நுண்ணுயிர் தடுப்பு கண்காணிப்பு நெட்வொர்க் மற்றும் பரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* பாதிப்பு குறித்த தேசிய வழிகாட்டுதல்கள், மருத்துவமனைகளில் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் கடந்த 2020 ஜனவரியில் வெளியிடப்பட்டன. இந்த வழிகாட்டுதல்கள் நாடு முழுவதும் பகிரப்பட்டுள்ளன.
* இத்திட்டத்தின் கீழ், நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம், 25 மாநிலங்களில் 30 மருத்துவ கல்லூரிகள் மூலம் கண்காணிப்பை மேற்கொள்கிறது. இந்த நெட்வொர்க், நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில், நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் துறையின் 20 பரிசோதனைக் கூடங்கள் மூலம் எதிர் நுண்ணுயிர் தடுப்பு கண்காணிப்பு நெட்வொர்க்கை ஒருங்கிணைக்கிறது.
என்று அமைச்சர் தெரிவித்தார்.
Loading More post
பஞ்சாப் அணியை 120 ரன்களில் கட்டுப்படுத்தியது ஹைதராபாத்!
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ
மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனு தள்ளுபடி - புதிய மனுவை தாக்கல் செய்ய உத்தரவு
சி.ஏ. படிப்புக்கான அடிப்படைத் தேர்வுக்கு இப்போதே விண்ணப்பிக்கலாம்
”ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை!”-கமல்ஹாசன் குற்றச்சாட்டு
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்