பிரபலமான 7 வகை மீன்களின் குடல்களில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையம் செய்த ஆய்வில் 80 சதவிகிதமான மீன் இனங்களின் வயிற்றில் பிளாஸ்டிக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிகளவாக சிவப்பு நிறங்களில் உள்ள இந்த பிளாஸ்டிக்குகள் மீன்களின் செதில்கள் மற்றும் குடலின் மீது படிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டினப்பாக்கம் பகுதியில் விற்கப்பட்ட கானாங்கெளுத்தி உள்ளிட்ட 7 வகையான மீன்களில் இந்த பிளாஸ்டிக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய கடல் சார் ஆய்வு மையம் கூறியுள்ளது.
பழவேற்காடு ஏரியில் தொடங்கி ஒடிசா வரையிலான வங்கக்கடலின் மேற்பகுதியில் சிறுசிறு பிளாஸ்டிக்குகள் மிதப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
சமைப்பதற்கு முன் பெரிய வகை மீன்களின் குடல் பகுதி அப்புறப்படுத்தப்பட்டாலும், பிளாஸ்டிக்கில் உள்ள வேதிப்பொருளையும் சேர்த்து உண்ணவேண்டிய நிலை உள்ளது. மனிதர்கள் பயன்படுத்தும் ஃபேஸ் வாஷ், அழகு சாதனப் பொருட்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், பெரிய பிளாஸ்டிக் பொருட்களின் சிறிய துகள்கள் கடலில் கலப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்