அரியலூரில் பட்டப்பகலில் முந்திரி காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த வாரியங்காவல் சுப்ரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமாரி. இவர் தனது வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடுகளை முந்திரி காட்டில் மேய்ப்பது வழக்கம்.
இந்நிலையில் இன்று தனது ஆடு மாடுகளை முந்திரி காட்டில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், அவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது அவர் தண்ணீர் எடுப்பதற்கு முயன்றபோது கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தாலி செயினை பறித்து தப்பி ஓட முயன்றார்.
இதில் அந்த பெண்ணுக்கும் இளைஞருக்கும் பயங்கர தள்ளு முள்ளு ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் அருகில் இருந்த அரிவாளால் தாலியை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதில் அந்த பெண்ணுக்கு கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் தேடி வருகின்றனர்.
Loading More post
'ஒரே நாடு' என்ற உணர்வுடன் பணியாற்றுவோம்: மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
பிற மாநிலங்களுக்கும் உதவும் ஒரே ஆக்சிஜன் உபரி மாநிலம்! - 'கேரள மாடல்' சாத்தியமானது எப்படி?
எந்த மருத்துவமனையில் எவ்வளவு படுக்கை வசதிகள்?- முழு விவரத்தை சொல்லும் தமிழக அரசின் வலைதளம்
‘பரிசோதனை இல்லை, மருந்து இல்லை, ஆக்ஸிஜன் இல்லை, ஆனால் 3408 கோடிக்கு டெண்டர்’ - ராகுல்
கொரோனா சிகிச்சைக்கு ஸைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்த ஒப்புதல்
ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறும் டெல்லி: அதிர்வூட்டும் பின்புலமும் கள நிலவரமும்!
ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால்..? - உச்ச நீதிமன்ற யோசனையும், தமிழக அரசின் வாதங்களும்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை