தொகுதி உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் அதிமுகவில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேமுதிகவின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் “2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டஙக்ளாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட கழக செயலாளர்களுடனான அவசர ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒறை கருத்தின் அடிப்படையில், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிக மற்றும் தமாகாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. பாமகவுக்கு நிகராக 23 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தேமுதிக வலியுறுத்தி வந்த நிலையில், 13 அல்லது 14 தொகுதிகளை ஒதுக்க அதிமுக திட்டமிட்டிருந்தது. இதனால், அதிருப்தி அடைந்த தேமுதிக தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் முடிவை எடுத்துள்ளது.
Loading More post
செங்கல்பட்டில் கோவாக்சின் தயாரிக்க திட்டம்: பாரத் பயோடெக் உடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை
"தமிழகத்துக்கு கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசிகள் வழங்குக"- மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
'மருத்துவ ஆக்ஸிஜனை மாநிலம் விட்டு மாநிலம் கொண்டுசெல்வது சவாலாக உள்ளது'
பிளஸ் 2 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா? - தலைமைச் செயலாளர் ஆலோசனை
குஜராத்: மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் காரிலேயே உயிரிழந்த கொரோனா நோயாளி
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!