சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத், உலகத்தின் கொரோனா தடுப்பூசிகளுக்கான உற்பத்தி மையம் எதுவென்று நாம் பார்த்தால், அது இந்தியாதான் என தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மருத்துவர் ஹன்சா மேத்தா ஒருங்கிணைத்த சொற்பொழிவில் இதனை தெரிவித்துள்ளார் அவர்.
“உலகம் முழுவதும் சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்து, அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது இந்தியா. கொரோனாவை எதிர்கொள்வதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் பணி சார்ந்த கொள்கை முடிவுகளில் இந்தியா தனித்து நிற்கிறது என்பதையும் நான் சொல்லியாக வேண்டும். உலகத்தின் கொரோனா தடுப்பூசிகளுக்கான உற்பத்தி மையம் எதுவென்று நாம் பார்த்தால், அது இந்தியா தான்.
அதிலும் அதிகளவில் கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்து வரும் சீரம் இந்தியா நிறுவனத்திற்கு எனது வாழ்த்துகள்” என அவர் தெரிவித்துள்ளார்.
Loading More post
"கொரோனா 2-ஆம் அலையில் நுரையீரல் பாதிப்புகள் முன்கூட்டியே தொடக்கம்"- மருத்துவர்கள்
தமிழகத்தில் வசிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்தது கனடா
மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து - 12 பேர் உயிரிழப்பு
கொரோனா அதிகமாக உள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை