புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது. கூட்டணிக்கு தலைமை வகிக்கும் என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி இது தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளார்.
என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதேபோல காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினரும், என்.ஆர். காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தெரிவித்தனர். ஆனால் கூட்டணி தொடர்பாக எந்த அறிவிப்பையும் கூறாமல் ரங்கசாமி மெளனம் காத்து வந்தார். இந்நிலையில், நேற்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரங்கசாமி பாஜகவோடு இணைய வேண்டியது கட்டாயம் என கூறியிருந்தார்.
இதற்கு சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். எனினும் புதுச்சேரி பாஜக மேலிடப் பொறுப்பாளர்களான மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால், நிர்மல்குமார் சுரானா ஆகியோருடன் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெயபால், பக்தவத்சலம், டி.பி.ஆர் செல்வம் உள்ளிட்டோர் 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து உடன்பாடு எட்டப்பட்டது.
இதையடுத்து, பாஜக உடனான தொகுதிப் பங்கீடு விவரங்களை இன்று காலை 11மணிக்கு என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வெளியிடவுள்ளார். என்.ஆர்.காங்கிரசுக்கு 17 தொகுதிகள், பாஜக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு மீதமுள்ள 13 இடங்கள் ஒதுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Loading More post
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை