புதுச்சேரியில் முதல்வர் பதவியை திமுக கேட்பதால், காங்கிரஸ் கட்சி கலக்கமடைந்துள்ளது.
புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளிடையே இரண்டாவது கட்டமாக புதுச்சேரியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியலிங்கம் எம்.பி., காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் திமுக சார்பில் மாநில அமைப்பாளர்கள் சிவா, சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையின்போது, திமுக அதிக இடங்களை கேட்டதாகவும், முதலமைச்சர் பதவியையும் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் காங்கிரஸ் கட்சி கலக்கமடைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு என்.ஆர்.காங்கிரஸுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில் காங்கிரஸ் 8 முறையும், திமுக 4 முறையும் ஆட்சியில் இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை
வெற்று பேச்சுகள் தேவையல்ல, நாட்டிற்கு தீர்வைக் கொடுங்கள்: ராகுல் காந்தி
ஆக்சிஜன் வாகனங்களை தடுத்து நிறுத்தக்கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
அரசின் பொறுப்பை நீதிமன்றம் சொல்லும் நிலைமை பெருமைக்குரியதா? : கமல்ஹாசன்
மேற்குவங்கத்தில் பரவும் மும்முறை மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ்!
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ