இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவில்லை என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
ஜூன் மாதம் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் லண்டன் நகரின் புகழ்ப்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக இப்போது அதில் மாற்றம் நிகழ்ந்தள்ளது. இது குறித்து 'இந்தியா டுடே'வுக்கு பேட்டியளித்துள்ளார் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி.
அதில் "அனைவரையும் போலவே நானும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை காண ஆவலாக இருக்கிறேன். இந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெற இருக்கிறது. லண்டனில் கொரோனா தொற்று அதிகரித்து இருப்பதால் லார்ட்ஸ் மைதானத்தில் இருந்து சவுத்தாம்ப்டனில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவை சில மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டுவிட்டது. இரு நாட்டு வீரர்களுக்கும் சவுத்தாம்ப்டன் நகர்தான் பாதுகாப்பானது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்றார் சவுரவ் கங்குலி.
மேலும் பேசிய அவர் "இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை மிகச் சிறப்பாக விளையாடி வெற்றிப்பெற்றது இந்தியா. இந்த வெற்றியை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியிலும் தொடரும் என நம்புகிறேன். கோலி, ரஹானே மற்றும் பன்ட் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடினார்கள்" என்றார் சவுரவ் கங்குலி.
Loading More post
இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும்- சென்னைவாசிகளுக்கு வானிலை மையம் அறிவுறுத்தல்
”ஆக்ஸிஜன் உற்பத்திக்காக எந்த முயற்சியையும் எடுக்கத் தயார்” - மத்திய அரசு
இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் மு.க.ஸ்டாலின்!
அசாம் வரும் அனைவருக்கும் 7 நாள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என அறிவிப்பு
இந்தியா: 24 மணி நேரத்தில் 3.14 லட்சம் பேருக்கு கொரோனா!
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ