தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித். நடிப்பையும் கடந்து கார் ரேஸிங், பைக் ரேஸிங், சைக்கிளிங், சிறிய ரக டிரான் பறக்க விடுவது என கலவையாக பலவித விஷயங்களில் கவனம் செலுத்தி வருபவர். இந்நிலையில் தற்போது துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
46-வது தமிழ்நாடு மாநில ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை ரைபிள் கிளப் சார்பில் பங்கேற்ற அஜித் மொத்தமாக ஆறு பதக்கங்களை வென்றுள்ளார்.
10 மீட்டர் ரைபிள் பிரிவில், ரசிகர்களால் செல்லமாக தல என அழைக்கப்படும் நடிகர் அஜித்தின் வெற்றியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதுகுறித்த செய்திகளும், படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சென்டர் ஃபயர் பிஸ்டல் .32 (ISSF) 25 மீட்டர் குழு பிரிவில் வெள்ளி, சென்டர் ஃபயர் பிஸ்டல் .32 (NR) 25 மீட்டர் குழு பிரிவில் தங்கம், ஸ்டேண்டர்ட் பிஸ்டலில் .22 (ISSF) 25 மீட்டர் குழுவில் தங்கம், ஸ்டேண்டர்ட் பிஸ்டலில் .22 (NR) 25 மீட்டர் குழுவில் வெள்ளி, ப்ரீ பிஸ்டல் .22 (NR) 50 மீட்டர் குழுவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் அஜித்.
[BREAKING NEWS] ?
Latest Pics Of THALA AJITH Receiving a Gold Medal Award For 10Meter Pistol Competition!! ??
[40th TAMILNADU State Shooting Championship] ?
So Proud Of You THALA ❣️ We Wishing You For a Great Success in All You Doings!! #Valimai | #AjithKumar pic.twitter.com/wvBiZi0ikS — AJITHKUMAR FANS CLUB (@TeamThalaFC) March 7, 2021
அஜித் போடியத்தின் மீது ஏறி தங்கப்பதக்கம் வெல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!