சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1538 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளதால் கடந்த 28ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருந்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி கட்சி தொடர்பான போஸ்டர், பேனர், பெயர் பலகைகள் உள்ளிட்டவற்றை வைத்த கட்சி பிரமுகர்கள் மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். தேர்தலின்போது எந்தவித அசாம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க சென்னையில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்கவும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இதுமட்டுமில்லாமல் குற்ற பதிவேடு ரவுடிகளை கண்டறிந்து போலீசார் சிறையிலும் அடைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 28 ஆம் தேதி முதல் இன்று காலை வரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 24 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும், பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கொண்டு சென்றதாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் பிரிவின் சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உரிமம் பெற்ற 1538 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், 9 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் 1089 ரவுடிகளிடம் பிராமண பத்திரத்தில் 6 மாதம் எந்த விதமான குற்றங்களிலும் ஈடுபடாமல் இருக்க கையெழுத்து பெற்றுள்ளதாகவும் சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Loading More post
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
'அந்நியன் கதை எனக்கே சொந்தம்’!- இயக்குநர் ஷங்கர் விளக்கம்!
செங்கல்பட்டில் கோவாக்சின் தயாரிக்க திட்டம்: பாரத் பயோடெக் உடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!