இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3 - 1 என இந்திய அணி கைப்பற்றியதன் மூலம் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடுவது உறுதியாகி உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு உயிர் கொடுக்கும் நோக்கில் ஐசிசி இந்த உலக டெஸ்ட் சாமியன்ஷிப் தொடரை நடத்துகிறது.
2019 முதல் 2021 வரையிலான சர்வதேச டெஸ்ட் தொடர்களில் அணிகள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் இறுதி போட்டியில் விளையாடும் அணிகளான இந்தியாவும், நியூசிலாந்தும் தேர்வாகியுள்ளன.
இந்த ரேஸில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மாதிரியான அணிகளும் இந்திய அணியுடன் மல்லுக்கு நின்ற நிலையில் இறுதியில் இந்தியா பைனலுக்கு முன்னேறியுள்ளது.
The #WTC21 finalists ? pic.twitter.com/OWBBifgbvx — ICC (@ICC) March 6, 2021
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்றதன் மூலம் இறுதி போட்டியில் விளையாடுவது உறுதியாகி உள்ளது. அதோடு 122 புள்ளிகளை பெற்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்