[X] Close >

உதயநிதி ஸ்டாலின் vs குஷ்பு ... சேப்பாக்கம் தொகுதியில் நேரடி பலப்பரீட்சை?

udhayanidhi-stalin-vs-kushboo-direct-contest-

சென்னையிலுள்ள சேப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலினும், பாஜக சார்பில் நடிகை குஷ்புவும் நேரடியாக மோதவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


Advertisement

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். அதில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், பாஜக சார்பில் இன்று லீக் ஆன வேட்பாளர் உத்தேச பட்டியலில், சேப்பாக்கம் தொகுதியில் நடிகை குஷ்பு போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே சேப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பாக உதயநிதியும், பாஜக சார்பில் குஷ்புவும் நேரடியாக பலப்பரீட்சை நடத்தயிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


Advertisement

நடிகை குஷ்பு தொடக்கத்தில் திமுகவில் இருந்தவர். பின்னர் தான் காங்கிரஸ் கட்சிக்கு சென்று பின்னர் தற்போது பாஜகவில் உள்ளார். உதயநிதியும், குஷ்புவும் நேரடியாக களம் காணும் பட்சத்தில் அந்த தொகுதியின் மீது தனிக்கவனம் இருக்கும்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close