[X] Close >

மீண்டும் மேஜிக் செய்த அக்ஸர், அஸ்வின்... இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

India-Won-the-Test-Series-against-England-and-entered-into-ICC-World-Test-Championship

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3 - 1 என்ற கணக்கில் வென்று காட்டியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் மட்டுமே இங்கிலாந்து அணி வென்றிருந்தது. இந்த தொடரை வென்றதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 13வது முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. 


Advertisement

நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்தியா அசத்தியிருந்தது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 205 ரன்கள் எடுக்க பின்னர் விளையாடிய இந்திய அணி ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தரின் அபார ஆட்டத்தால் 365 ரன்கள் எடுத்து 160 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 135 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுவது உறுதியாகி உள்ளது. சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 28 டெஸ்ட் தொடர்களில் ஒன்றை மட்டுமே இழந்துள்ளது இந்தியா. 


Advertisement

பேட்டிங்கில் ரிஷப் பண்ட்,  ஷர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் அசத்தியிருந்தனர். பவுலிங்கில் அஷ்வின் மற்றும் அக்சர் பட்டேல் விக்கெட் வேட்டை நிகழ்த்தியிருந்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் அஷ்வின் மற்றும் அக்சர் என இருவரும் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 30வது முறையாக 5 விக்கெட்டுகளுக்கும் கூடுதலாக விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close